அக்.16ஆம் தேதி கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொள்ளவிருந்ததற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கேகேஆர் அணியின் கேப்டனாக இயன் மோர்கன் அறிவிக்கப்பட்டார். அந்தப் போட்டியில் மும்பை அணியிடம் 78 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.
இதுகுறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறுகையில், '' ஐபிஎல் தொடரில் 7 போட்டிகள் ஆடி முடித்த பின், ஒரு அணியின் கேப்டனை மாற்றுவது நல்ல முடிவாக நான் பார்க்கவில்லை. ஏனென்றால் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்துகொண்டு இதுபோன்ற முடிவுகளை நிர்வாகத்தின் தரப்பில் எடுத்தால் அது அணியை நிச்சயம் பாதிக்கும்.
ஏனென்றால் தொடருக்கு முன்னதாக கேப்டனை வைத்து சில திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப அணியை தயார் செய்திருப்பார்கள். ஆனால் இப்போது அனைத்தையும் மாற்ற வேண்டும். இது எந்த வகையில் கேகேஆர் அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் புதிய உச்சத்தை எட்டிய தோனி!