ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்விகளைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளதால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்துள்ளது.
சிஎஸ்கே: தோனி (கேப்டன்), சாம் கரண், டூ ப்ளஸிஸ், ராயுடு, ஜகதீசன், கெய்க்வாட், மிட்செல் சாண்டனர், ஜடேஜா, தீபக் சாஹர்,மொனு குமார், தாஹிர்.
ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், மோயின் அலி, குகீரத் சிங் மான், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால்.
இதையும் படிங்க:வருண் சக்ரவர்த்தி சுழலால் சுருண்டது டெல்லி!