ETV Bharat / sports

ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்கு! - ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டி தகவல்கள்

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

rcb csk match update
rcb csk match update
author img

By

Published : Oct 25, 2020, 5:11 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் ஆரோன் ஃபிஞ்ச், தேவ்தத் படிகல் ஆகியோர் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - டி வில்லியர்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டி வில்லியர்ஸ் 39 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மோயின் அலியும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

மறுமுனையில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தனது 39ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 145 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க: ஆஸி., தொடருக்குத் தயாராகும் இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.