ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங் - ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே மன்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் கிறிஸ் கெய்ல் - ராகுல் இணை சேர்ந்தது. இந்த இணை ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என தீவிரம் காட்டியது. 4ஆவது ஓவரின் போது கெய்ல் கொடுத்த கேட்ச்சை ரியான் பராக் தவறவிட, வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட கெய்ல், அதிரடியாக ஆடத் தொடங்கினார்.
இதனால் பஞ்சாப் அணி பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் சேர்த்தது. இதே அதிரடியுடன் ஆட்டம் சென்றாலும், ஒவ்வொரு ஓவரிலும் இரண்டு டாட் பால்களை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசினர்.
இதனால் கெய்ல் களத்தில் இருந்தும் 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 81 ரன்களை மட்டுமே எடுத்தது. கெய்ல் அதிரடியாக ஆடுகிறார் என்பதால் ராகுல் சிங்கிள் எடுத்துவிட்டு ஸ்ட்ரைக்கை கெய்லிடம் கொடுத்தார். கெய்லின் அரைசதத்தால் 13ஆவது ஓவரில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.
பின்னர் கேப்டன் ராகுல் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பூரான் களமிறங்கினார். இவர் வந்தது முதலே அதிரடியாக சிக்சர் அடிக்க, 17 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. 18ஆவது ஓவரில் பூரான் 22 ரன்களில் வெளியெற, மேக்ஸ்வெல் களம் புகுந்தார். கடைசி ஓவரில் கிறிஸ் கெய்ல் சிக்சர் அடித்து 99 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆர்ச்சர் கெய்லை போல்டாக்கினார். இதனால் கெய்ல் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: பிக் பேஷ் தொடரில் ஆடுவதற்கு சாத்தியமே இல்லை: ஸ்டீவ் ஸ்மித்