ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, நாதன் குல்டர் நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க:கடைசி ஓவரில் சொதப்பிய சிஎஸ்கே; வாய்ப்பை வெற்றியாக மாற்றிய டெல்லி!