ETV Bharat / sports

மீண்டும் இப்படியே 80 நாள் பயோ-பபுளில் இருக்கணுமா? விராட் கோலி மிரட்சி! - விராட் கோலி

தொடர்ந்து கரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பயோ-பபுள் சூழலில் தங்க வைக்கப்படுவது பற்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

life-in-bio-bubble-is-tough-we-need-to-rethink-length-of-tours-viratlife-in-bio-bubble-is-tough-we-need-to-rethink-length-of-tours-virat-kohli-kohli
life-in-bio-bubble-is-tough-we-need-to-rethink-length-of-tours-virat-kohli
author img

By

Published : Nov 6, 2020, 6:42 PM IST

ஐபிஎல் தொடர் முடிவடைந்ததற்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யவுள்ளது. நவ.27ஆம் தொடங்கும் கிரிக்கெட் தொடர் ஜன.19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 14 நாள்கள் கிரிக்கெட் வீரர்கள் பயோ-பபுள் சூழலில் இருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான செப்டம்பர் மாதத்திலிருந்து பபுளில் இருக்கும் இந்திய வீரர்கள், மீண்டும் மூன்று மாதங்கள் பபுளில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதைப்பற்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ''இந்த கரோனா பயோ பபுளில் மீண்டும் மீண்டும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நமது அணியில் சிறந்த வீரர்கள் இருக்கும்போது பயோ பபுளில் இருப்பது கடினமில்லை. இப்போது இந்தச் சூழலை அனுபவிக்கிறோம். ஆனால் இதே சூழல் தொடரும்போது நிச்சயம் சலிப்படைய வைக்கிறது.

விராட் கோலி
விராட் கோலி

இதனை கிரிக்கெட் வாரியங்கள் கணக்கிட வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர் எவ்வளவு நாள்கள் நடக்கின்றன, அவ்வளவு நாள்கள் நடக்கும் தொடர் வீரர்களின் மூளையிலும் மனத்திலும் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும். தொடர்ந்து 80 நாள்கள் ஒரே சூழலில் இருந்தால் என்னவாகும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்கள் மனதளவில் நன்றாக உணர்தல் அவசியம். இதுபோன்ற உரையாடல்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.

ஏற்கனவே இதே கருத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் ஆர்ச்சருக்கு தொடர்ந்து 87 நாள்கள் பயோ பபுளில் இருந்து விளையாடிய பின், தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எலிமினேட்டரில் வெளியே செல்லப்போவது யார்? ஹைதராபாத் vs பெங்களூரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.