ETV Bharat / sports

ஐபிஎல் 2020: அகர்வால், ராகுல் அதிரடி; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு! - மயங்க் அகர்வா;ல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்களை குவித்துள்ளது.

KXIP vs RR 1st innings Updates
KXIP vs RR 1st innings Updates
author img

By

Published : Sep 27, 2020, 9:10 PM IST

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலி டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

மேலும், எதிரணியின் பந்துவீச்சை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி மைதனாத்தில் வானவேடிக்கை காட்டினர். இதில் மயங்க் அகர்வால் 26 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 36 பந்துகளிலும் அரைசதமடித்து அசத்தினர்.

சதமடித்து அசத்திய மயங்க் அகர்வால்
சதமடித்து அசத்திய மயங்க் அகர்வால்

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால், 45 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேலும் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் இணை முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 183 ரன்களை குவித்தும் அசத்தியது.

அரைசதமடித்து அசத்திய கே.எல்.ராகுல்
அரைசதமடித்து அசத்திய கே.எல்.ராகுல்

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுலும் 69 ரன்களுடன் வெளியேறினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 223 ரன்களை குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 106 ரன்களையும், கே.எல்.ராகுல் 69 ரன்களையும் குவித்தனர்.

இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடரில் அறிமுகமாகும் புதிய அணி - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.