ஐபிஎல் தொடரில் இன்று (அக்.26) 46ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, தினேஷ் கார்திக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் அவருடன் கைக்கோர்த்த அணியின் கேப்டன் மோர்கன், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து மோர்கன் 40 ரன்களில் அட்டமிழந்து வெளியெற, அவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 57 ரன்கள் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்களும், இயன் மோர்கன் 40 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:ஆஸி., தொடருக்கு தயாரான இஷாந்த் சர்மா?