ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் தொடக்க வீரர்களாக கில் - ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடியை, மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் சூர்யகுமார் யாதவின் அற்புதமான கேட்ச்சால் மும்பை அணியினர் பிரித்தனர். பின்னர் வந்த நிதீஷ் ராணா, டிகே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கில் மட்டும் 23 பந்துகளில் 21 எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மோர்கன் - ரஸ்ஸல் இணை அணியை மீட்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறையும் ரஸ்ஸல் ரசிகர்களை ஏமாற்றி 12 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் சைலன்ட் மோடுக்கு மாறிய மோர்கன் நிதானமாக ஆட, மறுமுனையில் கம்மின்ஸ் அதிரடியாக விளாசினார். இதனால் 15 ஓவர்களில் கேகேஆர் அணி 95 ரன்களை எடுத்தது.
இதையடுத்து அடுத்த 5 ஓவர்களில் கேகேஆர் அணி 53 ரன்களைச் சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: டி-20 போட்டியில் 200 : சாதனை படைத்த விராட் கோலி