ETV Bharat / sports

ஐபிஎல் 2020: புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு? மும்பை vs டெல்லி!

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.11) நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: Toppers Mumbai clash with Delhi in Sunday derby

author img

By

Published : Oct 11, 2020, 4:20 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடு கிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கு கிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் அதிக வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் பங்கேற்று, ஐந்து வெற்றி ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய போட்டியிலும் அவர்களது அதிரடி தொடரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ்

பந்துவீச்சு தரப்பில் வேகப்பந்துவீச்சில் காகிசோ ரபாடாவும், சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வினும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தொடக்க ஓவர்களிலேயே எதிரணியின் விக்கெட்டுகளை டெல்லி அணி வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்ற ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

டி காக், ரோஹித், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கிரன் பொல்லார்ட் என அதிரடி வீரர்கள், தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், மும்பை அணி எதிரணிக்கு சவாலளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

ஒரு சில போட்டிகளில் சொதப்பிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால், எதிரணியினர் கடும் நெருக்கடியை சந்திப்பர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. புள்ளிப்பட்டியலின் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்:

மும்பை, டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் சமமான வெற்றி விகிதத்தில் இருப்பதால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

உத்தேச அணி:

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

இதையும் படிங்க:'பட்லரின் விக்கெட் மிகவும் அவசியமான ஒன்று' - அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.