ETV Bharat / sports

‘வாழ்வா-சாவா’ ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான்! - ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டி தகவல்கள்

ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 22) நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: SRH to face RR in a do-or-die battle

author img

By

Published : Oct 22, 2020, 3:45 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்தும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிரபர்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் பங்கேற்ற ஏழு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனீஷ் பாண்டே என அதிரடி வீரர்களுடன் நடராஜன், ரஷித் கான் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது.

இருப்பினும் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி, பந்துவீச்சு தரப்பில் செய்த சிறிய தவறுகளாலே தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேசமயம் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் ஹைதராபாத் அணி உள்ளதால், இப்போட்டியில் வெற்றி ஈட்டும் முனைப்போடு செயல்படுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது.

அதிரடிக்குப் பெயர்போன சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதால், ராஜஸ்தான் அணி தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

பந்துவீச்சில் ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்கத் தவறிவருதால், அது அணிக்குபெரும் பலவீனமாக அமைந்துள்ளது.

எதுவாயினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதால், ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

உத்தேச அணி:

ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புட்.

ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், அப்துல் சம்த், ரஷித் கான், நடராஜன், பசில் தம்பி, சந்தீப் சர்மா.

இதையும் படிங்க:“நிறைய பேருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”- கோலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.