ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயலஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மாணித்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 48 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த மனீஷ் பாண்டே, ஐபிஎல் தொடரில் தனது 17ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 54 ரன்களை எடுத்தார்.
இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல் 2020: தேதி, இடம், அட்டவணை அறிவிப்பு!