ஐபிஎல் தொடரில் இன்று (அக்.11) நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
பேர்ஸ்டோவ், வார்னர், வில்லியம்சன், பட்லர், சாம்சன், ஸ்மித் என அதிரடி வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், அபிஷேக் சர்மா, ரஷித் கான், நடராஜன்,கலீல் அஹ்மத், சந்தீப் சர்மா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, வருண் ஆரோன்.
இதையும் படிங்க:பெங்களூருவிடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!