ETV Bharat / sports

ஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்?

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2020: Pant fit to go, may play against Kings XI Punjab

author img

By

Published : Oct 20, 2020, 3:24 PM IST

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக்டோபர் 20) நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

கடந்த சில போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பெறாமல் ஓய்விலிருந்த ரிஷப் பந்த், இன்றைய ஆட்டத்தின் போது களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டெல்லி அணியின் நிர்வாகி கூறுகையில், “கடந்த சில நாட்களாக அணியின் மருத்துவக் குழு மற்றும் பயிற்சியாளர்கள், ரிஷப் பந்தின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தற்போது ரிஷப் பந்த் போட்டியில் களமிறங்குவதற்கான முழு உடற்தகுதியுடன் இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பங்கேற்ற ஒன்பது போட்டிகளில் ஏழு வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் புதிய உச்சத்தை எட்டிய தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.