ஐபிஎல் தொடரில் நேற்று(அக்.11) நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் ராகுல் திவேத்தியா மீண்டும் ஒருமுறை தனது மேஜிக்கை நிகழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திவேத்தியா, “ஆட்டம் எங்கள் கையை விட்டு போகவில்லை என தோன்றியது. பிறகு கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் திட்டமிட்டோம். அதனை சரியாக செய்ததினால், போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
எங்களிடம் வலிமையான தொடக்க வரிசை வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கடந்த சில போட்டிகளாக சோபிக்காமல் இருந்து வருகின்றனர். அவர்களின் திறமை என்ன என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அதன் காரணமாகவே அவர்கள் தொடக்கத்தை சரியாக அமைக்காவிடிலும், நடுவரிசை வீரர்கள் அணியின் சூழலைப் புரிந்துகொண்டு ஆட்டத்தை ஃபினீஷ் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : கேகேஆர் vs ஆர்சிபி! வெல்வது யார்?