ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 13ஆவது போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பையும் பஞ்சாப் அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல், பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ரோகித் சர்மாவும், குவின்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். முதல் ஓவரை ஷெல்டன் காட்ரெல் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தில் குவின்டன் டி காக் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து சூர்யகுமார் களமிறங்கினார்.
சக வீரர் பதற்றத்தை உணர்வதற்கு முன்பாகவே அடுத்த ஒவரின் முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். அதே ஓவரின் 4ஆவது பந்தையும், ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார்.
சமி வீசிய இரண்டாவது ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. இரண்டு ஒவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. அடுத்த சில நிமிடங்களில் சூர்ய குமார் ரன் அவுட் ஆகி நடையை கட்ட மும்பை இந்தியன்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
எனினும் அடுத்து வந்த வீரர் கிஷான் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடிய இந்த இணையால் 12 ஓவரின் முடிவில் மும்பை அணி 80 ரன்கள் குவித்தது. ரோகித் 40 ரன்னுடன் இஷான் கிஷன் 26 ரன்களும் எடுத்திருந்தனர்.
அதன் பின்னர் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரிக்கு பந்துகளை விரட்டினார்.
இந்நிலையில் 15 ஓவரின் முடிவில் மும்பை 102 ரன்களை எடுத்தது. அப்போது ரோகித் 49 ரன்னுடன் களத்தில் இருந்தார். எதிர்தரப்பில் பொல்லாடு 11 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த ஓவரை நீஷ்ஹம் வீசினார். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸருடன் 20 ரன்களை குவித்தார்.
இதே வேகத்தில் பொல்லாடுவும் வீசி விளையாடினார். இந்நிலையில் ஆட்டத்தின் 17ஆவது ஓவரை சமி வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சர்மா முதல் பந்திலேயே மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது அவர் 70 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து, ஹர்திக் பாண்ட்யா களம் கண்டார்.
அவரும் தன் பங்குக்கு அடித்து ஆடினார். 18ஆவது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18ஆவது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தனர். பொல்லார்டு 16 ரன்னுடனும், பாண்ட்யா 18 ரன்னுடம் களத்தில் நின்றனர்.
19ஆவது ஓவரை சமி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பொல்லாடு ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு துரத்தினார் பாண்ட்யா. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்தப் பந்தை சமி அகலப் பந்தாக (வொய்டு) வீசினார். நான்கு, ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பொல்லார்டு. அடுத்தப் பந்தும் எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்று நான்கு ரன்களை பெற்றுவந்தது.
இதனால் முதலில் தள்ளாடிய மும்பை அணி, ரோகித், பொல்லாடு, பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் 19ஆவது ஓவரின் முடிவில் 166 ரன்களை எடுத்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரை கௌதம் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடுத்த பாண்ட்யா, அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடினார்.
அந்த ஓவரின் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் மும்பை 191 ரன்கள் எடுத்தது. பொல்லாடு 40 ரன்னுடனும், பாண்ட்யா 11 பந்தில் 30 ரன்னுடன் களத்தில் நின்றனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் பேட்டிங் செய்ய உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: மும்பையை முட்டி தூக்குமா பஞ்சாப்?