இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரோன் ஃபிஞ்ச் - தேவ்தத் படிகள் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இதில் படிகல் 18 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ஃபிஞ்சும் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தால் பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடி வந்த கோலியும் 48 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 48 ரன்களை எடுத்திருந்தார்.
இதையும் படிங்க: டென்மார்க் ஓபன்: காலிறுதிச்சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த்!