கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.
சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறாரா ஸ்டோக்ஸ்?