ஐபிஎல் தொடரில் இன்று (அக்.14) நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய ஐபில் போட்டியில் டெல்லி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஜிங்கே ரஹானே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, வருண் ஆரோன்.
இதையும் படிங்க:தோனியின் அக்ரஸிவ்; முடிவை மாற்றிய அம்பயர்...!