ETV Bharat / sports

இன்னும் எவ்வளவு நாள் பயோ பபுள் என்னும் கூண்டு: மிட்சல் ஸ்டார்க்

author img

By

Published : Nov 9, 2020, 8:48 PM IST

மெல்போர்ன்: பயோ பபுள் என்னும் கூண்டு நிலையானது இல்லை என்றாலும், எவ்வளவு நாள்கள் இப்படியே இருக்க முடியும் என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

how-long-can-you-stay-in-hubs-for-starc-on-living-in-bio-bubbles

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அப்படியே தனி விமானம் மூலம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கேயும் பயோ பபுள் சூழலே பின்பற்றப்படவுள்ளது. இதனைப் பற்றி ஏற்கனவே இந்திய கேப்டன் விராட் கோலி கேள்வி எழுப்பியிருந்தார். இதே கருத்தை இப்போது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ''நிச்சயமாக இப்போது கரோனாவுக்கு நடுவே வாழும் வாழ்க்கை நிலையானது அல்ல. நாம் அனைவரும் வெளி உலகத்தின் தொடர்பின்றி வாழ்கிறோம். ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள பல வீரர்கள் பல நாள்களாக குடும்பத்தைப் பார்க்காமல் இருக்கின்றனர். இது மிகவும் கடினமானது.

ஆனால் கிரிக்கெட் விளையாடுவதால், எதையும் குற்றம் சொல்ல முடியாது. இருந்தும் இப்படியே, எவ்வளவு நாள்கள் பயோ பபுள் என்னும் கூண்டுக்குள் இருக்க முடியும்.

சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலேயே இருக்கின்றன. இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளவர்கள், அடுத்த சம்மரிலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது.

நிச்சயம் அவர்கள் பணம் அதிகமாக சம்பாதிப்பார்கள். ஆனால் தேசிய அணிக்காக ஆடுபவர்கள் நிச்சயம் வீடு திரும்பும்போது எவ்வளவு பணம் பைகளில் வைத்திருந்தாலும் மகிழ்ச்சி இல்லாமல்தான் இருப்பார்கள்'' என்றார்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய தொடருக்கு நடுவே பிக் பாஷ் தொடர் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் பயோ பபுள் சூழலில் தங்க வைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்பை அணியுடன் தாக்குப்பிடிப்பாரா தொடக்க வீரர் ஸ்டோய்னிஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.