ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் நேற்று (அக்.07) நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து ட்வீட் செய்துள்ள ஹர்பஜன், “இ(எ)துவும் கடந்து போகும். என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது. ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டும் வெற்றி முகம் காணும்போது அடிக்கும் அடி, சம்பட்டி அடியாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி வருவதை ஐபிஎல் சரித்திரம் பேசும்” என நம்பிக்கை அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...ஐபிஎல் 2020: சிஎஸ்கேவை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!