ETV Bharat / sports

என் கனவுகளுடன் நிஜத்தில் வாழ்ந்தது நற்பேறுதான்: வாட்சன் ஃபேர்வெல் வீடியோ - ஐபிஎல் 2020

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக காணொலி வெளியிட்டுள்ளார்.

feel-crazily-lucky-to-have-lived-out-my-dream-shane-watson-bids-adieu

author img

By

Published : Nov 3, 2020, 8:49 PM IST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும், டி20 தொடர்களில் வாட்சன் தொடர்ந்து பங்கேற்றுவந்தார். சிஎஸ்கே அணிக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடிவந்த வாட்சன், இந்த ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தவுடன் (சிஎஸ்கே லீக்குடன் வெளியேற்றம்) ஓய்வினை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள வாட்சன், ''இவையனைத்தும் எனக்கு கனவாகத்தான் தொடங்கியது. ஐந்து வயது குழந்தையாக ஆஸ்திரேலிய அணி ஆடிய கிரிக்கெட் போட்டியைப் பார்த்தபோது, என் தாயிடம் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய அணிக்காகப் பங்கேற்க வேண்டும் என்றேன்.

ஆனால் இப்போது அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுகிறேன். என் கனவுகளுடன் நிஜத்தில் வாழ்ந்தது நற்பேறுதான்.

வாழ்வில் ஒரு கதவை அடைக்கும்போது மறுகதவு திறக்கும். என் வாழ்வில் திறக்கவுள்ள கதவை மிகவும் எதிர்பார்த்துள்ளேன். இந்தப் பயணத்தில் என் கனவை அடைவதற்காக உதவியவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

ஓய்வை அறிவிப்பதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த சிஎஸ்கே அணிக்காக நான் எனது கடைசி போட்டியில் ஆடினேன். கடந்த மூன்று ஆண்டுகளாக என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.

39 வயதில் எனது கிரிக்கெட் வாழ்வை முடிவுக்கு கொண்டுவருகிறேன். நிச்சயம் அடுத்து வரும் காலங்கள் கடினமாக இருக்கப் போகின்றன'' எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜீரோ டூ ஹீரோ: ஐபிஎல் 2020இல் ஸ்பார்க் அதிகமாக தென்பட்ட இளம் வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.