ETV Bharat / sports

மீண்டும் அசத்திய கெய்க்வாட்; பாஞ்சாப்பின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது சிஎஸ்கே!

author img

By

Published : Nov 1, 2020, 7:09 PM IST

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபில் லீக் அட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

CSK VS KXIP match result
CSK VS KXIP match result

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தீபக் ஹூடா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் கெய்க்வாட்-டூ பிளேசிஸ் சிறப்பான தொடக்கத்தை தந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடி வந்த பாப் டூ பிளேசிஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கெய்க்வாட், இந்த ஐபில் சீசனில் ஹாட்ரிக் அரைசதத்தை கடந்து அசத்தினார்.

இறுதியாக 18.5 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கின்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. சிஎஸ்கே அணி தரப்பில் கெய்க்வாட் 62 ரன்களை விளாசினார்.

இப்போட்டியில் தோழ்வியைத் தழுவியதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிட்ச்சை கணிக்க தவறிவிட்டோம் - மும்பை அணியுடனான தோல்வி குறித்து ஷ்ரேயாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.