ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில், பஞ்சாப் கேப்டன் அஷ்வின் ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் முறையில் வெளியேற்றினார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதேபோல் 2016-ஆம் ஆண்டு 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் போது ஜிம்பாப்வே வீரர் கரவாவை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமோ பவுல் மன்கட் செய்தார்.
தற்போது அது குறித்து பேசியுள்ள கீமோ பவுல், ' 17-வயதில் அந்த போட்டியில் மன்கட் செய்தபோது, அது சரி என்றே தோன்றியது. மன்கட் செய்த பின்னர் வந்த விமர்சங்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது எனது அணியும் எனது பயிற்சியாளர்களும் ஆதரவாக இருந்தனர்.மீண்டும் எந்த வீரர்ரையும் மன்கட் செய்யமாட்டேன்' எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காககீமோ பவுல் விளையாடி வருகிறார்.
மேலும், பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வினுக்கு ஆதராவாகவும், எதிராகவும் பலரும் கருத்துக்கூறிவருவது குறிப்பிடத்தக்கது.