பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது.
இதில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர்-பேயர்ஸ்டோவ் இணை, பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகளாகவிளாசினார்.
இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேர்த்த கம்பீர்-கிறிஸ் லின் (கொல்கத்தா) இணையின் சாதனையை முறியடித்துள்ளனர்.
முன்னதாக, 2017 ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில், கம்பீர் - கிறிஸ் லின் இணை, குஜாராத் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 184 ரன்களை சேர்த்ததுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில், சிறப்பாக ஆடிய வார்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது நான்காவது சதத்தை விளாசினார். மறுமுனையில், பேயர்ஸ்டோவ் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேர்த்த ஜோடிகள்:
1. வார்னர், பேயர்ஸ்டோவ் - 185 ரன்கள் (பெங்களூரு அணிக்கு எதிராக)
2. கம்பீர், கிறிஸ் லின் - 184 ரன்கள் (குஜராத் அணிக்கு எதிராக)
3. கெயில், தில்ஷன் - 167 ரன்கள் (புனே அணிக்கு எதிராக)
4. சச்சின், ஸ்மித் - 163 ரன்கள் (ராஜஸ்தான் அணிக்கு எதிராக)