ETV Bharat / sports

‘ஏதேனும் ஒரு அணி தோற்றுத்தானே ஆகவேண்டும்’ - சிரிப்புடன் தோல்வியைக் கடந்த ‘தல’ தோனி! - CSKvMI

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார்.

தோனி
author img

By

Published : May 8, 2019, 7:47 AM IST

12வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்த பின் பேசிய தோனி, “கிரிக்கெட் போட்டியென்றால் யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும். எங்கள் அணியின் பேட்டிங் சரியில்லாததே எங்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கருதுகிறேன். ஏனெனில், உள்ளூர் மைதானத்தில் 7 போட்டிகளில் களமிறங்கிய பின்பும் பேட்ஸ்மேன்களால் இன்னும் சரியான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. மூத்த வீரர்கள் பிட்ச்சிற்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தல தோனி
தோனி

அடுத்த போட்டியில் அந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அதுதவிர பல முக்கிய கேட்ச்சுகளை தவர விட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. நாங்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் லீக் சுற்றை முடித்ததால் எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும் இதுபோன்ற தருணத்தில் போட்டியை இழப்பது நல்லது இல்லை. எனவே அடுத்த போட்டியில் எங்களது தவறுகளைத் திருத்தி வெற்றி பாதைக்கு திரும்புவோம்” என்றார்.

மேலும், “சென்னை அணியின் தோல்விக்கு ரசிகர்கள் விரக்தியடையாமால், இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்தபோதே நாங்கள் கவலையடையவில்லை. இந்த தோல்விக்காகவா கவலையடைவோம். நிச்சயம் அடுத்தப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதிபெறும்” என இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.