ஐபிஎல் தொடரைப் போன்று மகளிருக்கான டி20 சேலஞ்ச் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் டிரையல் பிளேசர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்பட்டுவருகிறார்.
மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துவருவது குறித்து ஸ்மிருதி மந்தனா பேசுகையில், நான் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளில் பாலின வேறுபாடு பார்க்கவில்லை. எங்களை பெண் கிரிக்கெட்டர்கள் என அழைக்க வேண்டாம். கிரிக்கெட்டர்கள் என அழைத்தால் மட்டும் போதும். யாருக்கும் தேவைப்படாத ஒரு அடையாளத்தை ஏன் சுமந்துகொண்டு சுற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.