சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கொல்கத்தா அணியில் மிரட்டலான ஃபார்மில் இருக்கும் ரஸலை சென்னை அணி எவ்வாறு கட்டுப்படுத்தும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதைத் தொடர்ந்து, போட்டி தொடங்கியவுடன், கொல்கத்தா அணியில் ரஸலைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலையாக ஆடவில்லை.
இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து, கொல்கத்தா அணியின் பேட்டிங் குறித்து சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'ஸ்கெட்ச்சு ரஸலுக்கு இல்ல... கொல்கத்தா டீமுக்குதான்' என கலாய்த்துள்ளது. அவர்கள் ட்வீட் செய்ததைப் போலவே, சென்னை அணி ரஸல் என்ற ஒரு வீரரை அவுட் செய்வதற்கு பதிலாக, ஒட்டு மொத்த அணியையும் காலி செய்துவிட்டது என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துவருகின்றனர்.