ETV Bharat / sports

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்துவீச்சு! - IPL 2019

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்துவீச்சு!
author img

By

Published : May 4, 2019, 7:54 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது இடத்துக்கு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 54ஆவது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

பெங்களூரு அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ், ஹென்ரிச் கிளாசன் ஆகியோருக்குப் பதிலாக ஷிம்ரான் ஹெட்மயர், கோலின் டி கிராண்ட்ஹோம் தேர்வாகியுள்ளனர். மறுமுனையில், ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மாவுக்கு பதிலாக யூசுஃப் பதான் இடம்பெற்றுள்ளார்.

இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இந்தப் போட்டி கடைசி போட்டி என்பதால் ஆட்டம் கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஹைதராபாத் அணி இந்தத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், பெங்களூரு அணி 13 போட்டிகளில் நான்கு வெற்றி, 8 தோல்வி ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி: கோலி (கேப்டன்), பார்திவ் படேல், டி வில்லியர்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், வாஷிங்டன் சுந்தர், குர்கீரத் சிங் மான், கோலின் டி கிராண்ட்ஹோம், பவான் நெகி, நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரொலியா, சாஹல்

ஹைதராபாத் அணி: வில்லியம்சன் (கேப்டன்), சஹா, கப்தில், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், யூசுஃப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, பாசில் தாம்பி

Intro:Body:

RR vs DC result

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.