ETV Bharat / sports

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான்! - குருணால் பாண்டியா

ஜெய்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான்
author img

By

Published : Apr 20, 2019, 1:12 PM IST

12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜெய்ப்பூரில் இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க இருக்கும் ஆட்டத்தில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஆறு போட்டிகளில் தோல்வி என நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

அந்த அணியை பொருத்த வரையில் இப்போட்டியில் இருந்து அடுத்து வரும் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால், அந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் எனத் தெரிகிறது. மறுமுனையில், மும்பை அணி 9 போட்டிகளில் ஆறு வெற்றி, மூன்று தோல்வி என 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Hardik Pandya
ஹர்திக் பாண்டியா

மும்பை அணி பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவிலும் அசத்தி வருகிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா அந்த அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக செயல்படுகிறார். மறுமுனையில், ராஜஸ்தான் அணியோ போட்டியில் வெற்றிபெற தடுமாறி வருகிறது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லரைத் தவிர, ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் ரஹானே என மற்ற பேட்ஸ்மேன்கள் அணிக்கு கைகொடுக்கவில்லை.

Butler
பட்லர்

அதேபோல், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஜோவ்ரே ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் மட்டுமே சிறப்பாக பந்துவீசுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், மும்பை அணி 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மாலை 4 மணிக்கு ஜெய்பூரில் நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.