ETV Bharat / sports

டி.கே.வின் போராட்டம் வீண்... ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

author img

By

Published : Apr 26, 2019, 12:09 AM IST

கொல்கத்தா: ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43ஆவது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து, 176 ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில் ரஹானே, சாம்சன் ஆகியோர் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்த நிலையில், ரஹானே 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, சஞ்சு சாம்சன் 22 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களுடனும் நடையைக் கட்டினர். இதனால், ராஜஸ்தான் அணி 10.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து 78 ரன்களை எடுத்திருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரியான் பராக் - ஸ்டூவர்ட் பின்னி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த தருணத்தில், 11 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பெவிலியன் திரும்பினார். இருப்பினும், ஸ்ரேயாஸ் கோபாலுடன் ஜோடி சேர்ந்த ரியான் பராக் அட்டகாசமாக விளையாடினார். ராஜஸ்தான் அணி 15.2 ஓவர்களில் 123 ரன்களை எடுத்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் கோபால் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பராக் - ஆர்ச்சர் அதிரடியாக ஆடினர். கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், ரஸல் வீசிய 19ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்த பராக், அடுத்த பந்திலேயே ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார். 31 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 47 ரன்களில் ரியான் பராக் ஆட்டமிழந்தார்.

இதனால், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர், முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்டார். இதனால், ராஜஸ்தான் அணி இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், கொல்கத்தா அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று கடினமாகியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.