ETV Bharat / sports

ஐபிஎல் தொடரிலிருந்து ரபாடா விலகல்!

author img

By

Published : May 3, 2019, 7:46 PM IST

காயம் காரணமாக, டெல்லி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரபாடா நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஐபிஎல்-லில் இருந்து ரபாடா விலகல்!

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், டெல்லி கேபிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏழு வருடங்களுக்குப் பிறகு நடப்பு தொடரில்தான் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆலோகர் கங்குலி, ஆகியோரின் செயல்திட்டத்தால், அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் கைகொடுத்தனர். இருப்பினும், டெல்லி அணியின் பெரும்பாலான வெற்றிக்கு ரபாடாவின் பந்துவீச்சுதான் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி சூப்பர் ஓவரில் ரபாடாவின் அபாரமான பந்துவீச்சால் வெற்றிபெற்றது. அதிரடி வீரர் ரஸலை, அவர் க்ளின் போல்ட் செய்தது, ரசிகர்களை வியப்படை செய்தது. இந்த வெற்றிதான், டெல்லி அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையை தந்தது.

Rabada
ரஸலை போல்ட் செய்த ரபாடா

12 போட்டிகளில் விளையாடிய அவர், 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில், இவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார்.

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நெருங்கும் நிலையில், ரபாடா இல்லாதது டெல்லி அணிக்கு பேரழிப்பு என கருதப்படுகிறது. அவரது இடத்தை வேறு எந்த வீரர் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. "தொடரின் முக்கியமான கட்டத்தின்போது, டெல்லி அணியில் இருந்து விலகுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது" என ரபாடா தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.