ETV Bharat / sports

ஐபிஎல் 2019: டி காக் அதிரடி; யுவி, பொல்லார்ட் ஏமாற்றம்; இறுதியில் மும்பை 176 ரன்கள் குவிப்பு - அஷ்வின்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை குவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 7-வது அரைசதம் விளாசினார் மும்பை வீரர் டி காக்
author img

By

Published : Mar 30, 2019, 6:34 PM IST

மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார். பஞ்சாப் அணியில் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக, தமிழக வீரர் முருகன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், பெங்களூரு அணிக்கு எதிராக ஆடிய அதே 11 வீரர்களுடன் மும்பை அணி களமிறங்கியது.

இதைத்தொடர்ந்து, மும்பை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, டி காக் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இவ்விரு வீரர்களும் 51 ரன்களை சேர்த்த நிலையில், ரோஹித் ஷர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, வந்த சூர்யகுமார் யாதவ் 11 ரன்களுடன் நடையைக் கட்ட, யுவராஜ் சிங் உடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டி காக், அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் விளாசினார்.

39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 60 ரன்களை அடித்த டி காக், முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, யுவராஜ் சிங்18, பொல்லார்ட் 7, குருணல் பாண்டியா 10 என்ற சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

கடந்தப் போட்டியை போலவே இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 31 ரன்களுக்கு கடைசி ஓவரில் அவுட் ஆனார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது.பஞ்சாப் அணி தரப்பில் வில்ஜோயன், முகமது ஷமி, முருகன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.