ETV Bharat / sports

கேப்டன்சியில் மேலும் ஒரு மகுடம் சூடிய தோனி! - ஐபிஎல் 2020 செய்திகள்

ஐபிஎல் வரலற்றில் கேப்டனாக 100 வெற்றியை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்.

MS Dhoni becomes first captain to win 100 IPL matches

author img

By

Published : Sep 20, 2020, 3:09 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நேற்று (செப்.19) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து, மும்பை இந்தியன்ஸ் அணியை 162 ரன்களுக்குள் சுருட்டியது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கேவிற்கு அம்பத்தி ராயுடு, பாப் டூ ப்ளெசிஸ் இணை அதிரடியாக விளையாடி வெற்றியைப் தேடி கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

முன்னதாக கடந்தாண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

கேப்டன்சியில் மேலும் ஒரு மகுடம் சூடிய தோனி

இதையடுத்து அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிக்கவுள்ளதாகவும் அறிவித்து சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது.

ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களைப் பிடித்த தோனி

இதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் கேப்டனாக 100 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைக்கு தோனி சொந்தக்காரரானார். அதுமட்டுமில்லாமல் நேற்றைய ஆட்டத்தின்போது இரண்டு கேட்ச்சுகளைப் பிடித்த தோனி, விக்கெட் கீப்பராக தனது 100ஆவது கேட்சைப் பிடித்தும் சாதனைப்படைத்தார்.

இதையும் படிங்க: முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.