ETV Bharat / sports

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் நிகழ்ந்த ஒற்றுமைகள்! - ஐபிஎல்

நடப்பு ஐபிஎல் தொடரில், முதல்முறையாக புள்ளிகள் பட்டியலில் சுவாரஸ்யமான ஒற்றுமைகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்து சிறு அலசல்.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் நிகழ்ந்து ஒற்றுமைகள்
author img

By

Published : May 7, 2019, 5:21 PM IST

Updated : May 7, 2019, 6:12 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது வழக்கம். அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் (18), சென்னை சூப்பர் கிங்ஸ்(18), டெல்லி கேபிட்டல்ஸ்(18), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (12) ஆகிய நான்கு அணிகள் இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

MI
மும்பை இந்தியன்ஸ்

இதில், நெட்ரன் ரேட் முறையில் மும்பை அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இதனால், இவ்விரு அணிகள் இன்று நடைபெறவுள்ள முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதவுள்ளன. இந்தத் தொடரில் பல்வேறு சாதனைகள் இடம்பெற்று இருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் சுவாரஸ்யமான ஒற்றுமைகள் நிகழ்ந்துள்ளன.

csk
சென்னை

முதல் மூன்று இடத்தில் இருக்கும் அணிகள் (மும்பை, சென்னை,டெல்லி) ஒரே புள்ளிகளை (18) பெற்றுள்ளன. அவர்களுக்கு அடுத்தப்படியாக, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தில் இருக்கும் அணிகள் (ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப்) அதேபோல ஒரே புள்ளிகளை (12)பெற்றுள்ளன.

ராஜஸ்தான், பெங்களூரு அணிகளும் ஒரே புள்ளிகளை(11) பெற்று ஏழாவது, கடைசி இடத்தை பிடித்துள்ளன. இதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே, நடப்பு சீசனில்தான் புள்ளிகள் பட்டியலில் இதுபோன்ற ஒற்றுமைகள் நிகழ்ந்துள்ளன.

ஹைதராபாத் அணிக்கு அடித்த ஜாக்பாட் -

இந்தத் தொடரில் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே ஒரு அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும். கொல்கத்தா, பஞ்சாப் அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும், அவர்களது தலை எழுத்து நெட்ரன் ரேட் முறையில்தான் மாறியது. அதன் அடிப்படையிலேயே, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி , ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன.

SRH
ஹைதராபாத்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல் விவரம்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளிகள் நெட்ரன் ரேட்
மும்பை 14 9 5 0 18 +0.421
சென்னை 14 9 5 0 18 +0.131
டெல்லி 14 9 5 0 18 +0.044
ஹைதராபாத் 14 6 8 0 12 +0.577
கொல்கத்தா 14 6 8 0 12 +0.028
பஞ்சாப் 14 6 8 0 12 -0.251
ராஜஸ்தான் 14 5 8 1 11 -0.449
பெங்களூரு 14 5 8 1 11 -0.667

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/cricket/cricket-top-news/afridi-ruined-many-careers-for-his-own-good-farhat-2/na20190507111712087

Conclusion:
Last Updated : May 7, 2019, 6:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.