ETV Bharat / sports

பஞ்சாப் அபாரம்; ராஜஸ்தானுக்கு 6ஆவது தோல்வி! - ஸ்மித்

மொகாலி : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

பஞ்சாப் அபாரம்; ராஜஸ்தானுக்கு ஆறாவது தோல்வி!
author img

By

Published : Apr 16, 2019, 11:54 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பஞ்சாப் அணியை பேட்டிங் ஆடப் பணித்தார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி ராகுல்-மில்லர் அதிரடியால் 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திரிபாதி - ஜோஸ் பட்லர் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. ஒருமுனையில் திரிபாதி நிதானமாக ரன்களை சேர்க்க, மறுமுனையில் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்திருந்தபோது, பட்லர் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

சாம்சன் - திரிபாதி இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டது. பின்னர் அதிரடியாக ஆடிய சாம்சன், அஸ்வின் வீசிய சுழலில் சிக்கி போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து கேப்டன் ரஹானே - திரிபாதி இணை ஜோடி சேர்ந்தது.

ரஹானே
திரிபாதி

14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 117 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. ராஜஸ்தான் அணி வெற்றிபெற கடைசி 36 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முருகன் அஸ்வின் வீசிய 15ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய திரிபாதி 44 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில், பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் பரபரப்பானது. இதனையடுத்து 24 பதுகளில் 56 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உருவானது.

ரஹானே
ரஹானே

இதனையடுத்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டர்னர் வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கேப்டன் ரஹானே - ஆர்ச்சர் இணை களத்திலிருக்க, பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசத் தொடங்கினர்.

17ஆவது ஓவரில் ராஜஸ்தான் அணி 6 ரன்களை மட்டுமே எடுத்ததையடுத்து, அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆர்ச்சர் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கிட்டத்தட்ட ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கை ஓங்கியது. இதனையடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக அந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அனி வெற்றிபெற 12 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது.

ரஹானே
அஸ்வின்

இந்நிலையில் ரஹானே 26 ரன்களில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. அந்த ஓவரில் பின்னி அதிரடியாக இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 23 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் கோபால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் ராஜஸ்தான் அணி 10 ரன்களை மட்டுமே சேர்த்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் பின்னி 11 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணி சார்பில் அஸ்வின், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:

KXIP vs RR result

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.