ETV Bharat / sports

கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை?

கொல்கத்தா: இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.

KKR vs MI
author img

By

Published : Apr 28, 2019, 10:02 AM IST

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதுகின்றன. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.

நைட் ரைடர்ஸ் அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி, பின்னர் தொடர் தோல்விகளால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு பறிபோகும் என்பதால் இன்று கொல்கத்தா அணியினரின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நைட் ரைடர்ஸ் அணி
ரஸல் - தினேஷ் கார்த்திக்

அதேபோல் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முழுபலத்தை வெளிப்படுத்திவரும் மும்பை அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். ரோஹித், டி காக், ஹர்திக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளதால் மிகப்பெரிய ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவர்.

கொல்கத்தா
ஹர்திக் பாண்டியா

லின், நரைன், தினேஷ் கார்த்திக், கில், ரஸல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மும்பை அணியை வீழ்த்த முடியும் என்ற நிலை உள்ளது.

கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் இன்றையப் போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.