ETV Bharat / sports

பாகுபலி போல் கொல்கத்தாவை தூக்கிப்பிடித்த ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக்!

author img

By

Published : Mar 30, 2019, 10:40 PM IST

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்துள்ளது.

கொல்கத்தாவை தூக்கிப்பிடித்த ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக்

டெல்லி கேபிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டெல்லி ஃபெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியில், சுனில் நரைனக்கு பதிலாக, நிக்கில் நாயக் சேர்கப்பட்டுள்ளார்.மறுமுனையில், டெல்லி அணியில் நான்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இஷாந்த் ஷர்மா, அக்சர் படேல், ராகுல் தெவாட்டியா, பொல்ட் ஆகியோருக்கு பதிலாக அனுமா விஹாரி, ஹர்ஷால் படேல், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லெமிச்சானே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் நிகில் நாயக் 7, கிறிஸ் லின் 20, உத்தப்பா 11, நிதிஷ் ராணா 1, ஷுப்மன் கில் 4 என சொற்ப ரன்களில் பெவிலியனக்கு திரும்பினர். இதனால், கொல்கத்தா அணி 9.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை எடுத்திருந்தது.

அப்போது ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில், தினேஷ் கார்த்திக் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் 17-வது ஓவிரன் போது அரைசதம் விளாசினார். 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 4 பவுண்டரி என 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, பொறுப்புடன் ஆடிய தினேஷ் கார்த்திக் 50 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் பியூஷ் சாவ்லாவின் அதிரடி பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது.கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது.லோ ஸ்கோராக முடிய வேண்டிய கொல்கத்தாவின் இன்னிங்ஸை ரஸ்ஸலும், தினேஷ் கார்த்திக்கும் பாகுபலி போல் அணியை காப்பாற்றியுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.