ETV Bharat / sports

பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா பந்துவீச்சு! - Gayle

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது

பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா பந்துவீச்சு!
author img

By

Published : May 3, 2019, 8:01 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி, மொகாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். கடந்தப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடிய அதே 11 வீரர்களுடன் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது. மறுமுனையில், பஞ்சாப் அணியில் மில்லர், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக, சாம் கரன், ஆன்ட்ரூவ் டை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்விரு அணிகளும் இந்தத் தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்தப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், இந்தப் போட்டி அனல் பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணி: அஷ்வின் (கேப்டன்), கெயில், கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், நிகோலஸ் பூரான், சாம் கரன், சிம்ரன் சிங், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஆன்ட்ரூவ் டை

கொல்கத்தா அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுனில் நரைன், கிறிஸ் லின், ஷுப்மன் கில், உத்தப்பா, ரஸல், ரின்கு சிங், பியூஷ் சாவ்லா, சந்தீப் வாரியர், ஹெரி கர்னி

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.