ETV Bharat / sports

சாம் கரன் பந்துவீச்சில் சுருண்ட டெல்லி; பஞ்சாப் அணிக்கு 3ஆவது வெற்றி! - சாம் கரண்

மொகாலி : ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இந்த சீசனின் முதல் ஹாட்ரிக் சாதனை சாம் கரண் படைத்தார்.

ash
author img

By

Published : Apr 2, 2019, 7:36 AM IST

Updated : Apr 2, 2019, 8:06 AM IST

12ஆவது சீசனுக்கான போட்டிகள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை பேட்டிங் ஆட பணித்தார்.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மில்லர் 43 ரன்களும், சர்ஃபராஸ் கான் 39 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பாக மோரிஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியில் 99 ரன்கள் விளாசிய இளம் வீரர் ப்ரித்வி ஷா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பின்னர் வந்த கேட்பன் ஸ்ரேயாஸ் ஐயர் - தவானுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்ந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடக்க வீரர் தவான் 30 ரன்கள் எடுத்து அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த்-காலின் இங்ரம் ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டது. பின்னர் கடைசி 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.

shami
ஷமி

பின்னர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த இணை, பஞ்சாபின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் போல்டாக, தொடர்ந்து வந்த மோரிஸ் அஷ்வினின் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இதனையடுத்து, 18 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை உருவானது. அப்போது சாம் கரன் வீசிய பந்தில், இங்ரம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த ஹர்ஷல் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பரபரப்பானது.

டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசுவதற்கு ஷமி அழைக்கப்பட்டார். அப்போது முதல் இரண்டு பந்துகளை சந்தித்த விஹாரி ரன் ஏதும் எடுக்காமல் மூன்றாவது பந்தில் போல்டாகி வெளியேறினார். அவேஷ் கான் - ரபாடா இணை களத்தில் இருந்தது.

sam
சாம் கரண்

அந்த ஓவரில் நான்கு ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. சாம் கரன் பந்துவீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரபாடா போல்டாகி ஆட்டமிழக்க, சாம் கரனுக்கு ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பஞ்சாப் அணி வெற்றியின் விளிம்புக்கு சென்றது. அடுத்த பந்தில் லெமிச்சானே போல்டாக பஞ்சாப் அணி 14 ரன்காள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம் கரன் இந்த சீசனின் முதல் ஹாட்ரிக்கைப் பதிவு செய்து சாதனை படைத்தார்.

இறுதியாக டெல்லி அணி 19.2 ஓவர்களில் 152 ரன்காளுக்குன் ஆல் அவுட்டாகி 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக சாம் கரன் நான்கு விக்கெட்டுகளையும், அஷ்வின், ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Intro:Body:

Kings XI punjab beats DC

Conclusion:
Last Updated : Apr 2, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.