ETV Bharat / sports

தனி ஒருவனாக ஹைதராபாத் அணியை கறை சேர்த்த வார்னர் - Rashid Khan

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்துள்ளது.

பஞ்சாப் - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!
author img

By

Published : Apr 8, 2019, 10:11 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

பஞ்சாப் அணியில், ஆன்ட்ரூவ் டை, முருகன் அஷ்வின் ஆகியோருக்கு பதிலாக முஜிப்-உர்-ரஹ்மான் மற்றும் அன்கீட் ராஜ்புட் சேர்க்கப்பட்டனர். மறுமுனையில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய அதே 11 வீரர்கள் கொண்ட அணியுடன் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பேயர்ஸ்டோவ் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதைத்தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய விஜய் சங்கர், வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேயர்ஸ்டோவ் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆட்டமிழந்ததால், பொறுப்புடன் ஆட வேண்டிய சூழ்நிலைக்கு வார்னர் தள்ளப்பட்டார். அதேசமயம், பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினர்.

வார்னர் - விஜய் சங்கர் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்த நிலையில் விஜய் சங்கர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த முகமது நபி 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால் ஹைதராபாத் அணி 13.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்களை எடுத்தது.

பின்னர், மணிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த வார்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதைத்தொடர்ந்து, மணிஷ் பாண்டே 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி ஓவரில் தீபக் ஹூடா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்களை அடித்தார். இதனால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்களை அடித்தது.

தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய வார்னர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.