ETV Bharat / sports

ராஜஸ்தான் அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி! - டி வில்லியர்ஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

rr
author img

By

Published : Apr 2, 2019, 9:48 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் கோலி - பார்த்திவ் படேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்ட இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது.

அப்போது, கேப்டன் கோலி 25 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸ் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பெங்களூரு அணி ரன் குவிக்க தடுமாறியது.

kohli
கோலி விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயஸ் கோபால்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் பார்த்திவ் படேல், ஐபிஎல் தொடர்களில் 12-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ஸ்டோனிஸ் ஒத்துழைப்பு கொடுத்து ஆட, சிறப்பாக ஆடிய பார்த்திவ் படேல் 41 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

parthiv patel
பார்த்திவ் படேல்

பின்னர் ஸ்டோனிஸ் - மொயின் அலி இணை அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 18 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 31 ரன்களுடனும், மொயின் அலி 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகமாக ஸ்ரேயஸ் கோபால் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

snmith
ராஜஸ்தான் அணியின் ஸ்மித்- ஆர்ச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.