ETV Bharat / sports

அஷ்வின் செய்தது சரியா? தவறா? - 'மன்கட்' குறித்த பார்வை! - அஷ்வின்

ஜெய்பூர் : 12ஆவது ஐபிஎல் சீசனில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் வீரர் பட்லரை பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் மன்கட் அவுட் முறையில் வீழ்த்தியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அஷ்வின் மான்கட் அவுட் முறையில் பட்லரை வீழ்த்திய
author img

By

Published : Mar 26, 2019, 9:39 AM IST

Updated : Mar 26, 2019, 12:33 PM IST

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதின. அதில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பேட்டிங்கின்போது நன்றாக ஆடிக்கொண்டிருந்த பட்லரை, பஞ்சாப் கேப்டன் அஷ்வின் பந்துவீசும் போது மன்கட் முறையில் அவுட் செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்கட் அவுட் என்றால் என்ன?

ashwin-butler
மான்கட் முறையில் பட்லரை வீழ்த்தியபோது...

மன்கட் அவுட் முறை என்பது, பந்துவீச்சாளர் பந்துவீசுவதற்கு முன் நான்-ஸ்ட்ரைக்கர் (non-striker) முனையிலிருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியேறினால், பவுலர் அவரை ரன் அவுட் செய்து ஆட்டமிழக்க வைத்தால் அதன்பெயர் மன்கட் ஆகும். இது ஐசிசி விதிகளில் ஒன்றுதான்.

சர்ச்சை :

இந்த முறையில் அவுட் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும், யாரும் பயன்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை (sportsmanship) பாதிக்கும் என வீரர்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் அஷ்வின் நேற்றையப் போட்டியில் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்ததால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சர்வதேச வீரர், ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டின் ஸ்போட்ஸ்மேன் ஷிப்பை கெடுக்கும் விதத்தில் எப்படி செயல்படலாம் என இணையவாசிகள் அஸ்வினுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

ashwin-butler
அஷ்வின் விக்கெட் வீழ்த்தியபோது...

விளக்கம் :

ஐசிசி விதியின்படியே பட்லரின் விக்கெட்டினை அஷ்வின் வீழ்த்தியுள்ளார். ஒரு பவுலர் பந்துவீசுவதற்கு முன் நான் - ஸ்ட்ரைக்கர் முனையிலிருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியேறக்கூடாது என்பது விதி. இது அனைத்து பேட்ஸ்மேனுக்கும் பொதுவானதுதான். அதையும்மீறி அவர் செயல்பட்டால், அவருக்கு வார்னிங் கொடுப்பது என்பது சிறுபிள்ளைத்தனமான செயல். சர்வதேச கிரிக்கெட் போட்டியில், வார்னிங் கொடுப்பது முறையாகாது.

பேட்ஸ்மேன் கிரீஸைவிட்டு வெளியேறினால் அவுட் செய்யப்படுவோம் என்ற விழிப்புணர்வுடன் தான் பேட்ஸ்மேன் இருக்க வேண்டுமே தவிர, அதற்கு வார்னிங் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறாகும். வார்னிங் கொடுக்க வேண்டுமென்றால் கிரீஸ் எதற்காக போடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.

சில மன்கட் விக்கெட்டுகளும்; சர்ச்சைகளும் :

முதன்முறையாக இந்த மன்கட் முறையில் விக்கெட்டை வீழ்த்தியவர் நம் இந்திய வீரர் தான்.1947-48 ஆம் ஆண்டுஆஸ்திரேலியாவின் பில் பிரவுன் விக்கெட்டை வீழ்த்தியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் மன்கட். அதனால் தான் இந்த விக்கெட் எடுக்கும் முறைக்கு மன்கட் என பெயரிடப்பட்டது. இந்த முறையை பலரும் எதிர்த்த நிலையில் அதனை முதன் முறையாக ஆதரித்தவர் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன். இவர் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டனும் கூட.

இதுகுறித்து பிராட்மேன் பேசுகையில், வினோத் மன்கட்டிற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு எனத் தெரியவில்லை. கிரிக்கெட் விதிபடியே பில் பிரவுன் அவுட் செய்யப்பட்டுள்ளார். எதிர்முனையில் இருக்கும் வீரர், பந்துவீசுவதற்கு முன்னரே கிரீஸைவிட்டு வெளியேறுவதால் அந்த செயல் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமைகிறது. அப்போது எதிரணியினர் ரன்-அவுட் செய்வதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பி இந்திய வீரர் வினோத்-க்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல் கடந்த 2014-ஆம் ஆண்டு, இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதியப் போட்டியில், இலங்கை வீரர் சேனநாயகே இதே பட்லரை மன்கட் முறையில் வெளியேற்றினார்.

அதேபோல், 2012-ஆம் ஆண்டு, இலங்கை - இந்தியா இடையேயானப் போட்டியில், திருமாண்ணேவை இந்திய வீரர் அஷ்வின் மன்கட் செய்தார். ஆனால், களத்திலிருந்த கேப்டன் ஷேவாக், அந்த செயல் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பிற்கு எதிராக இருக்கும் என்பதால் அம்பயரிடம் அப்பீல் செய்யாமல் விட்டுவிட்டார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒருமுறை வார்னிங் செய்தார். மேலும், இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக் உள்ளூர் போட்டிகளில் பலமுறை மன்கட் முறை உபயோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Ashwin mankad to butler

Conclusion:
Last Updated : Mar 26, 2019, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.