ETV Bharat / sports

சின்னாபின்னமாகப் போவது யார்? சென்னை - டெல்லி பலப்பரீட்சை!

author img

By

Published : May 10, 2019, 12:51 PM IST

விசாகபட்டினம்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள குவாலிஃபையர் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி மோதவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி கேபிட்டல்ஸ்:

இந்த சீசனின் தொடங்கத்தில் பெயர் மாற்றம் செய்து கொண்ட டெல்லி அணியை, ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்படிடா ஆட்டோ ஓடும் என கேட்டவர்களுக்கு அடி மேல் அடியாய் அடித்து ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் கெத்தாக நுழைந்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். இன்று நடைபெறவுள்ள போட்டியில் வென்றால் போதும், முதன்முதலாக ஐபிஎல் தொடரின் இறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம். ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா இணையின் தொடக்கம் எதிரணியினரை துவம்சம் செய்து வருகிறது. பின்னர் வரும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மாடர்ன் டே சேவாக் என அழைக்கப்படும் ரிஷப் பந்த் களத்தில் நின்றுவிட்டால், வான வேடிக்கையாக பந்தை பறக்கவிடுகிறார். பந்துவீச்சில் யாரும் எதிர்பாரா வண்ணம் இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா இருவரும் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர். ரபாடா நாடு திரும்பினால் என்ன... நான் பார்த்துக் கொள்கிறேன் என போல்ட் பட்டையை கிளப்புகிறார்.

டெல்லி அணி
டெல்லி அணி

சென்னை சூப்பர் கிங்ஸ்:

நடப்பு சாம்பியன் என்ற பெயருடன் இந்த சீசனைத் தொடங்கிய சென்னை அணி, தொடக்கத்திலிருந்து, கேப்டன் தோனியின் அபார ஆட்டத்தால் மற்ற அணிகளை வெளுத்து வாங்கினாலும், மும்பை அணியைக் கண்டால் மட்டும் ஜெரியை (jerry) கண்டு நடுங்கும் டாமாக (tom) பதுங்கியது. ராயுடு, ரெய்னா, வாட்சன், டூ ப்ளஸீ ஆகியோர் ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், தோனி மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது மற்ற அணிகளுக்கு சாதகமாகியது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில், பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர், தமிழ் புலவர் ஹர்பஜன், சென்னை செல்லப்பிள்ளை சாஹர், சாம்பியன் பிராவோ அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லி அணி
டெல்லி அணி

குவாலிஃபையர் சுற்று:

டெல்லி அணிக்கு ஹோம் கிரவுண்ட் என்றால் பயம்... சென்னை அணி கடைசி போட்டியில் சொந்த மைதானத்தில் தோல்வி... இந்நிலையில், இரண்டிற்கும் மத்தியில் விசாகப்பட்டினத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. எனவே கடந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியை ஊதி தள்ளிய டெல்லி அணி, இந்தப் போட்டியில் சென்னை அணியை ஒரு கை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரிஷப் பந்த் தோனிக்கு விட்ட சவாலுக்கு, டெல்லி அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்று பதில் கொடுத்தது. தற்போது மூன்றாவது முறையாக கிடைத்துள்ள வாய்ப்பில் சென்னை அணியை பந்த் நிச்சயம் பிளந்து கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி
ரெய்னா

அது ஏன்டா எங்க கூட ஆடும்போது மட்டும் எல்லா அணியும் இம்புட்டு ஆக்ரோஷமா செயல்படுறீங்க என சென்னை ரசிகர்கள் கேட்கும் நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. மேலும் கடந்த போட்டியின் தோல்விக்கு பின்னர் கேப்டன் தோனி, ஜெய்கிறோமோ இல்லயோ சண்ட செய்யனும் என்பது போல் பேசிவிட்டு சென்றுள்ளதால் சென்னை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.