ETV Bharat / sports

வார்னரின் அதிரடியைத் தாங்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்? - hayderabad vs rajasthan

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் vs ஹைதராபாத்
author img

By

Published : Mar 29, 2019, 2:12 PM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இன்றையைப் போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இருஅணிகள் ஆடிய முதல் போட்டியில் இருஅணிகளும் தோல்வியடைந்ததால், தொடரில் முதல் வெற்றியைப் பெற மிகப்பெரிய போராட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில், தடைக்கு பின்னர் வார்னர் திரும்பிவந்த முதல் போட்டியிலேயே 85 ரன்கள் விளாசி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். அதேபோல், பேயர்ஸ்டோவ், விஜய் சங்கர், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், தீபக் ஹூடா, ஷாகிப் அல் ஹசன், ரஹீத் கான் என அட்டகாசமாக பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. மேலும் கடந்த போட்டியில் காயத்தால் விளையாடாமல் இருந்த கேப்டன் வில்லியம்சன் திரும்புவார் என பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளதால் வார்னருடன் இணைந்து வில்லியன்சனும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நட்சத்திர வீரர் ரஷீத் கான், சித்தார்த் கவுல் என ஐபிஎல் அணிகளிலேயே சிறந்த பந்துவீச்சு கூட்டணியை கொண்டுள்ளது. ஆனாலும் கடந்த போட்டியில், ரஷீத் கானை தவிர யாரும் சிறப்பாக பந்துவீசாததால் ஹைதராபத் அணி தோல்வியை சந்தித்தது. ஹைதராபத் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி முடிவு செய்யப்படும்.

ராஜஸ்தான் அணியைப் பார்த்தோமானால் கேப்டன் ரஹானே, 'மன்கட் சர்ச்சை' பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி என சிறந்த வீரர்களைக் கொண்டாலும் பெரிய இலக்கை விரட்டுவதற்கு பட்லரை மட்டுமே நம்பி வருகிறது. கேப்டன் ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை ஹைதராபாத் அணியோடு ஒப்பீட்டு பார்த்தால் சற்று பலவீனமாகவே இருக்கிறது. அதில் ஆர்ச்சர், உனாத்கட், ஸ்ரேயஸ் கோபால், கெளதம், குல்கர்னி ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஹைதராபாத் அணி ராஜஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடும் என்பது நிச்சயம்.

வார்னரின் அதிரடியைக் கட்டுப்படுத்துவது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. அதேபோல், புவனேஷ்வர் குமார் கடந்த போட்டியில் கேப்டன்சிபணியால், பந்துவீச்சில் கோட்டைவிட்டதை இந்த போட்டியில் சரிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

Ipl league - Hyd vs RR

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.