ETV Bharat / sports

ராஜஸ்தானை வீழ்த்தி குவாலிஃபயர் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி? - Steve Smioth

டெல்லி: இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது.

DCvRR
author img

By

Published : May 4, 2019, 11:32 AM IST

12ஆவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகளில் நான்காவது இடத்திற்கு மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்றுள்ள நிலையில், குவாலிஃபயர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறுவதோடு, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள், அவர்களது ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணியில் ரஹானே, சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பின்னி, ரியன் பராக் ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருப்பதால் டெல்லி அணி பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபால், ஒஷானே தாமஸ், உனாத்கட், ஆரோன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருவதைத் தொடர வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

டெல்லி அணியைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, இங்ரம், அக்ஸர் படேல், மோரிஸ் என நட்சத்திர பட்டாளமே பேட்டிங்கில் இருந்தாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதைத் திருத்திக் கொள்ள வேண்டும். பந்துவீச்சில் ரபாடா இல்லாத இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சொந்த மைதானத்தில் டெல்லி அணி தொடர்ந்து சொதப்பி வருவதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.