ETV Bharat / sports

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா; ஹைதராபாத்துடன் இன்று மோதல்! - ரஸல்

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

ஹைதராபாத்
author img

By

Published : Apr 21, 2019, 3:01 PM IST

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று விளையாடுகிறது. புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கும் அணிகள் விளையாடுவதால் வெற்றிக்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் வார்னர், பெயர்ஸ்டோவ், விஜய் சங்கர் ஆகியோரை நம்பியே பேட்டிங்கில் உள்ளது. கேப்டன் வில்லியம்சன் உட்பட மற்ற வீரர்கள் யாரும் நடுவரிசையில் சிறப்பாக ஆடாதது அணியின் வெற்றியைப் பாதித்துவருகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை பெற்றதுதான். எனவே வார்னர் - பெயர்ஸ்டோவ் ஆகியோரோடு மற்ற வீரர்களும் ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும்.

ரஸல்
ஹைதராபாத் அணி வீரர்கள்

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியின் விளிம்பிற்குச் சென்று தோல்வியடைந்து வருகிறது. தொடக்க வீரர் நரைன் தொடர்ந்து சொதப்பி வருவதால், மற்றத் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். தொடர்ந்து நன்றாக ஆடிவரும் கில், கார்த்திக், ரஸல், ராணா ஆகியோர் இந்தப் போட்டியிலும் நிச்சயம் அதனைத் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி வீரர் ரஸலை கடைசியாக களமிறக்காமல் நான்காம் நிலையில் பரிசோதித்தால் கொல்கத்தா அணிக்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் கடந்தப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தது... அவரது ஃபார்ம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

ஹைதராபாத் அணி கடந்தப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியுள்ளதால் நல்ல மனநிலையுடன் களமிறங்கும். அதேபோல் சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல் ஆகியோர் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஸல்
ரஸல் - ராணா

அதேபோல் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் ரஸலை எவ்வாறு சமாளிக்கக்போகிறார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.