ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இன்று விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் நிர்வாகம் ரஹானேவை நீக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளதற்கான பலன் கிடைக்குமா என்பது குறித்து இன்று தெரிந்துவிடும்.
டெல்லி அணி இந்தப் போட்டியிலொ வெற்றிபெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் கடந்தப் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. டெல்லி அணியில் சந்தீப் லெமிச்சானேவுக்கு பதிலாக கிறிஸ் மோரீஸ் இடம்பெற்றுள்ளார்.

டெல்லி அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிகர் தவான், பிரித்வி ஷா, காலின் இங்ரம், ரபாடா, அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரீஸ், இஷாந்த் ஷர்மா, ரூதர்ஃபோர்டு.

ராஜஸ்தான் அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ரியன் பராஹ், ஸ்டுவர்ட் பின்னி, உனாத்கட், குல்கர்னி, டர்னர், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்ச்சர்.