ETV Bharat / sports

தினேஷ் கார்த்திக் படையை சமாளிக்குமா புவனேஷ்வர் குமார் லெவன்! - வார்னர்

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை வார்னர் தலைமையிலான ஹைதராபத் அணி எதிர்கொள்ளவுள்ளது.

கொல்கத்தா - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
author img

By

Published : Mar 24, 2019, 2:19 PM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் 12ஆவது தொடர் நேற்று தொடங்கியது. இதில், தல தோனி தலைமையிலான சென்னை அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது லீக் போட்டியில், இரண்டுமுறை ஐபிஎல் சாம்பியன் வென்ற கொல்கத்தா அணியுடனும், ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஹைதரபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கொல்கத்தா அணியில், சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிஅந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்துவருகின்றனர். குறிப்பாக, பவர்-பிளே ஓவரில் கிறிஸ் லின்னை காட்டிலும் சுனில் நரைன் எதிரிணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளார்.

அதைத்தவிர, அந்த அணியில் ஆண்ட்ரே ரசல், கார்லோஸ் பிராத்வொய்ட், தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், குல்தீப் யாதவ், நிதிஷ் ரானா என சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர்.

மறுமுனையில் டேவிட் வார்னர் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பியது அந்த அணியின்பேட்டிங்கிற்கு பலத்தை சேர்த்துள்ளது. கடந்த சீசனில் வார்னர் இல்லாதபோது ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திய கேன் வில்லியம்சன், இம்முறை காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.

ஹைதராபாத் அணியில் ரஷித் கான், முகமது நபி, சாகிப் உல் ஹசன், சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், விஜய் சங்கர் என மிரட்டலான பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இதனால், பலம் வாய்ந்த கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கேள்வியாக உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை இவ்விரு அணிகள் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா ஒன்பது முறையும் ஹைதராபாத் அணி ஆறு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஏழு ஆட்டங்களில் கொல்கத்தா அணி ஐந்தில் வெற்றிபெற்று, இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணி, தனது சொந்த மைதானத்தின் வெற்றிக் கணக்கை அதிகரிக்குமா என்பது போட்டியின் முடிவில்தான் தெரியும்.

இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று மாலை நான்கு மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.