ETV Bharat / sports

மும்பை பந்துவீச்சில் சரிந்த டெல்லி பேட்ஸ்மேன்கள்; 2ஆம் இடத்திற்கு முன்னேறிய மும்பை! - முன்பை இந்தியன்ஸ்

டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சால் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது.

வெற்றியைக் கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணி
author img

By

Published : Apr 19, 2019, 9:55 AM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா - தவான் இறங்கினர். இந்த இணை தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியது. அதிலும் தவான் மும்பை வீரர்களை பவுண்டர் லைனிற்கு தொடர்ந்து அனுப்பி வைத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி

முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த நிலையில், தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவரைத் தொடர்ந்து காலின் முன்ரோ - ப்ரித்வி ஷா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது பந்துவீசிய ராகுல் சாஹர் பந்தில் பிரித்வி ஷா 20 ரன்களில் ஆட்டமிழக்க, முன்ரோ 3 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்னிலும், நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் 7 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி

இதனையடுத்து அக்ஸர் படேல் - மோரிஸ் இணை மும்பை பந்துவீச்சை சிறிது நேரம் சமாளித்தது. மலிங்காவின் வேகத்தில் மோரிஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கீமோ பவுல் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் நிதானமாக ஆடிய அக்ஸர் படேல் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கடைசி ஓவரில் ரபாடா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற , டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

மும்பை அணி சார்பாக ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை அணி 9 போட்டிகளில் 6-ல் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Intro:Body:

cricket Dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.